தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகினார். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விலகியதாக கட்சி தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கடந்த சில நாட்களாகவே எனது ராஜினாமா குறித்து ஒவ்வொரு தகவல்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். அதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகியதாக கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியே கட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளேன்.

நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன். வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே விலகினேன். ஓய்வுபெற தேவையில்லை என்றால் தொடர்ந்து தி.மு.க.விலேயே இருந்திருப்பேன். நான் ஏன் வேறு கட்சிக்கு செல்லப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal