தென்னிந்திய படங்களில் நடித்து வந்த அந்த பிரபல நடிகைக்கும் ஃபிட்னஸ் டிரைனர் ஆதித்யா அஜய் கபூர் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை காட்டி நடிகையுடன் உறவு கொண்ட ஆதித்யா அஜய் கபூர் நடிகையை கொடுமை கொடுக்க ஆரம்பித்ததும் அவர் மீது நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நண்பர் ஒருவர் வீட்டில் இருவரும் சந்தித்துள்ளனர். அதன் பின்னர் செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளனர். நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஆதித்யா அஜய் கபூர் நடிகையுடன் பலமுறை உறவில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பையில் உள்ள ‘கஃபே பாரடே’ எனும் இடத்தில் வசித்து வரும் ஃபிட்னஸ் டிரைனரின் வீட்டுக்கு எல்லாம் நடிகை சென்று வர ஆரம்பித்ததில், அதிகளவு நடிகைக்கு அவன் டார்ச்சர் கொடுப்பது தெரிய வந்தது. பின்னர், அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என தனது ஒதுங்கி இருந்த நிலையிலும், நடிகையை துரத்தி வந்து டார்ச்சர் கொடுத்துள்ளான் என புகாரில் நடிகை குறிப்பிட்டுள்ளார்.
தான் சொல்லும் படி கேட்டு நடக்காமல், தன்னை விட்டு நீங்கி செல்ல நினைத்தால், நடிகையையும் அவரது குடும்பத்தில் உள்ள உறவினர்களையும் கொன்று விடுவதாகவும், நடிகையின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்றும் ஆதித்யா கொலை மிரட்டல் விடுத்த நிலையில், தான் தற்போது நடிகை இதற்கு மேல் இந்த விவகாரத்தில் பொறுமையாக இருக்க முடியாது என போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நடிகை கொடுத்த பலாத்கார புகாரை தொடர்ந்து மும்பை போலீஸார் ஆதித்யா அஜய் கபூரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவன் மீது 376, 323, 504, 506(2), 67, மற்றும் 67(கி) உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.