உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது.
இது குறித்து, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்பப்படும்.
தகுதியாளர்கள் இன்று முதல் அக்.,14 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்.,19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும்.
உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜன.29 ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.