இளம்பெண் ஒருவரை நிர்வாண குளியலுக்கு அழைத்த பி.டி.ஓ.வுக்கு, பெண்ணின் உறவினர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதான்கான் (50)என்பவர் 30 வயது பெண்ணை நிர்வாண குளியல் போட அழைத்ததால் உறவினர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர்.
வேலை செய்து வந்த இடத்தில் அவர் அந்த பெண்ணிடம் வீட்டிற்கு வா நிர்வாண குளியல் போடலாம் என்று அழைத்துள்ளார். அந்தப் பெண் மறுத்தபோது போனில் மெசேஜ் செய்து தொல்லை செய்துள்ளார் .
இதனால் அவர் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற போது இந்த உண்மை உறவினர்களுக்கு தெரிந்த நிலையில் அலுவலகத்திற்கு விரைந்த அனைவரும் அதிகாரியை அடித்து உதைத்து மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது பதான்கான் தெரியாமல் தவறு நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்த விசாரித்து வருகிறார்கள். மக்களை காக்கும் உயர் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.