வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் 5 மாவட்டங்களில் இன்றும்(செப்.,10), நாளையும்(செப்.,11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை, வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதனால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும்(செப்.,10) , நாளையும்(செப்.,11) கனமழை பெய்யலாம்.

அதேபோல், காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னயை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெ ப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal