கடந்த இரு தினங்களுக்கு முன்பு ‘தமிழக அரசியல்’ டாட் காமில், ‘அமலாக்கத்துறை நெருக்கடி… அலர்ட் ஆன செந்தில்பாலாஜி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிற
கடந்த 2011 -15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார், 3 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமலாக்கப்பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டனர்,
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக அமலக்கத்துறை மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் கேவியட் மனுவை செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மேலும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் படியும் உத்தரவிட்டிருக்கிறது!