முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களின் வீட்டு விஷேசம் மற்றும் தொண்டர்களின் இல்லங்களுக்கு நேரடியாக விசிட் செய்து வருகிறார்.

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அமைதியாக இருந்து வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தார். அப்போது குடும்ப உறுப்பினர்கள் அழகிரியிடம் சமாதானப்பேச்சு நடத்தினர். இதனை தொடர்ந்து அழகிரி அமைதியாக இருந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களின் இல்லத்திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்களை சந்தித்தும் வருகிறார். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவராகவும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான இசக்கி முத்து என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது ஆதரவாளரான இசக்கி முத்துவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தொடர்ந்து இசக்கி முத்துவின் மருத்துவ செலவுக்கு பண உதவி அளித்தார்.

மு.க.அழகிரியிடம் மீண்டும் மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா? மீண்டும் நீங்கள் திமுகவில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? உதயநிதியும், உங்கள் மகன் துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், மு.க.அழகிரி அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal