நள்ளிரவில் டார்ச்சர் செய்வதாகவும், டைவர்ஸ் கேட்பதாகவும் தீபா வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து மாதவன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இவருக்கும் மாதவன் என்பவருக்கும் இடையே கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெயலலிதா மறைந்த பிறகு வெளி உலகத்திற்கு தீபா தெரிய தொடங்கினார். புதிதாக கட்சியையும் தொடங்கினார்கள். இருந்த போதும் அரசியில் உலகில் பிராகாசிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின் படி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தீபா மற்றும் தீபக் கை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தீபா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் கடந்த ஆறு மாதங்களாக மாதவன் என்னுடன் பிரச்னை செய்கிறார். திடீரென, அவரைவிட்டு பிரிந்துபோக சொல்கிறார். ஈவு இரக்கம் இல்லாமல் நள்ளிரவில் எழுப்பி சண்டை போடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி இருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் தீபாவின் கணவர் மாதவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘எனது மனைவி தீபா, என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்பொழுது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. சராசரி ஆக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்ப தகராறு தான். அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸடேட்டஸ் போட்டுள்ளார். அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன். அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை. இதுவும் கடந்துப் போகும்’’ என மாதவன் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal