‘எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 முக்கிய பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி எம்.எல்.ஏ.,க்கள் அனுப்ப வேண்டும். கோரிக்கை பட்டியலை சம்பந்தப்பட்ட கலெக்டர்களுக்கு 15 நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும்.

சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை பரிந்துரைக்கலாம். மாவட்டங்களிடையே இருக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதார ஏற்றதாழ்வுகளை சீர்செய்வோம் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் மிகுந்த பயனளிக்கும். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal