கணவன்தான் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. ஆனால், திருமணமான சில மாதங்களாக போதையில் வந்து இரவு நேரத்தில் மனைவி தொந்தரவு செய்வதாக கணவர் காவல் நிலையத்தில் கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் கண்டேயா கிராமத்தை சேர்ந்த இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே மனைவி தொல்லை தாங்க முடியவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது மனைவி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார். சில நாட்கள் மது குடித்துவிட்டு தகராறு செய்கிறார்.

சம்பவ நாளன்று இரவு 12 மணியளவில் நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, என்னை மனைவி எழுப்பி தொந்தரவு செய்தார். அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சுவற்றில் தலையை மோதிவிட்டு தாக்கியதால் காயம் ஏற்பட்டுள்ளது. எனது கை மற்றும் உடற்பாகங்களை கடித்துள்ளார். எனக்கும், எனது தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எனவே என் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குடிபோதையில் கணவரை மனைவி துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal