கள்ளக்காதலை கைவிடாத கணவனின் மர்ம உறுப்பில் மனைவி வெந்நீர் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம்தான் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி கள்ளக்காதலியை இவர் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனை அறிந்த அவரது மனைவி கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்தார்.

கடந்த ஒரு மாதமாக தம்பதிக்குள் இது தொடர்பாக கடும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்தது. தனக்கு கணவர் துரோகம் செய்ததை நினைத்து தினமும் மனக்குமுறலில் வாலிபரின் மனைவி தவித்து வந்தார். நேற்று இரவு கள்ளத்தொடர்பு சம்பந்தமாக கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வாலிபர் வீட்டில் படுத்து தூங்கினார்.

கள்ளக்காதலை கைவிட மறுக்கும் கணவனை நினைத்து இளம்பெண் மன வேதனை அடைந்தார். நள்ளிரவில் மனக்குமுறலில் இருந்த இளம்பெண் ஆத்திரமடைந்தார். சரியான பாடம் புகட்டினால் மட்டுமே கணவன் திருந்துவார். தன்னை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என முடிவு செய்தார். வீட்டில் அடுப்பு பற்ற வைத்து வெந்நீரை கொதிக்க வைத்தார். ஆவி பறக்க கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை தூக்கி வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆடைகளை விலக்கி விட்டு அவரது மர்ம உறுப்பில் வெந்நீரை ஊற்றினார்.

இதனால் வாலிபர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வாலிபரை மீட்டு பாணாவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வாலிபரின் மனைவியிடம் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal