தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். அவர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டதும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து உடனடியாக ஓகே சொன்ன விவகாரம்தான், அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்திக்கிறார். இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும், 11.30 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த டெல்லி பயணத்தில் புதன், வியாழன் டெல்லியில் இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் வெள்ளி வரை திட்டத்தை நீட்டிக்க அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் பொருட்டு ஆகஸ்ட் 17,18,19 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பு டைம் கேட்டு இருக்கிறதாம். இந்த 3 தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் சந்திக்க நேரம் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அலுவலகம் நேரம் ஒதுக்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி இந்த விஷயத்தை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டுள்ளார். அப்போது, ‘‘ஸ்டாலின் நேரம் கேட்டாரா உடனே அவருக்கு நேரம் கொடுங்கள். அவர் விரும்பிய தேதியிலேயே விரைவாக சந்திக்கும் வகையில் நேரம் கொடுங்கள். எந்த தேதி முன்னால் வருகிறதோ அதையே கொடுக்கலாம்’’ என்று பிரதமர் மோடி கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் நாளையே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் பெற்றுள்ளார். நாளை மாலை இந்த சந்திப்பு நடக்க உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இவர்கள் சந்திக்க 30 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீட் விலக்கு மசோதா, காவிரி விவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த முக்கியத்துவம்தான், பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal