ஈ.வெ.ரா., சிலை குறித்து பேசிய விவகாரத்தில், சினிமா ‘ஸ்டன்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் தமிழக போலீசார் இன்று கைது செய்தனர். பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர்!

சென்னை, மதுரவாயலில் இம்மாதம் 1ம் தேதி நடந்த கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பங்கேற்றார்.’ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை உடைத்து அகற்றும் நாள் தான் ஹிந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்’ என, அவர் பேசினார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலர் குமரன் புகார் அளித்தார்.

இதையடுத்து இரு பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த கனல் கண்ணன், புதுச்சேரியில் தங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal