மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அனுப்பிரதா மோந்தல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே மம்தாவின் அரசில் அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமனத்தில் கோடி, கோடியாக லஞ்சம் சுருட்டிய ஒருவர் கைது செய்யப்பட்தை அடுத்து தற்போது மீண்டும் அரவது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது மம்தாவுக்கு பேரிடியாக இறங்கி உள்ளது.
கடந்த 2015- & 2017 மாநிலம் விட்டு அருகில் உள்ள வங்கதேசத்திற்கு 20 ஆயிரம் கால்நடைகள் சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்பட்டுள்ளது. இதில் உறுதுணையாக இருந்த அனுப்பிரதா மந்தலுக்கு கோடிக்ககணக்கில் லாபம் கிட்டியது. இது தொடர்பாக மோப்பம் பிடித்த சிபிஐ வழக்கு பதிவு செய்து 11 பேரை தேடி வந்தது. இதில் மோந்தலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் கோல்கட்டாவில் சிபிஐ அதிகாரிகள் அனுப்பிரதா மோந்தலை கைது செய்தனர். முன்னதாக அவரது வீட்டின் அருகே 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த மாநில போலீசார் பலர் இதில் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.