கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மீது வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், மனைவி விளையாட்டிற்காக தூக்கு மாட்டி விபரிதமாக இறந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது!

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியபாய்.. 33 வயதாகிறது. இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் செந்தில். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்களாகின்றன. உயிருக்கு உயிராக விரும்பித்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

செந்தில், ஞானபாக்கியபாய் இருவருமே வேலைக்கு சென்றுவிடுவதால், இரவு நேரத்தில்தான் போனில் பேசுவார்கள். தினமும் வீடியோ காலில் பேசுவது செந்திலின் வழக்கம். அப்படித்தான், சம்பவத்தன்று இரவு மனைவிக்கு போன் செய்துள்ளார். குழந்தைகளைத் தூங்கவைத்துவிட்டு செந்திலுடன் ஞானபாக்கியபாய் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசியிருக்கிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே 2 பேருக்கும் பிரச்சனை வந்துள்ளது. அதையடுத்து, கணவர் வாட்ஸ்அப் வீடியோ காலிலிருக்கும்போதே ஞானபாக்கியபாய் தூக்கு மாட்டிக் கொண்டார்.

இதை வீடியோவில் பார்த்து பதறிப்போன செந்தில், உடனடியாக சொந்தக்காரர்களுக்க போன் மூலம் தகவல் சொல்லி உள்ளார். உறவினர்களும் வீட்டுக்குச்சென்று கதவை உடைத்து கொண்டு பார்த்தனர்.. ஆனால், ஞானபாக்கியபாய் சடலமாய் தொங்கிக்கொண்டிருந்தார். சிரித்து கொண்டே சடலத்தில் தொங்கியதை கண்டு அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர். இது குறித்து வழக்கும் பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

இச்சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ‘‘மனைவி மீது செந்திலுக்கு அடிக்கடி சந்தேகம் வருமாம். இது தொடர்பாகவே இருவருக்குள்ளும் நிறைய முறை தகராறு வந்துள்ளது. சம்பவத்தன்று வீடியோ காலில் பேசும்போது, குழந்தைகள் தூங்கிவிட்டிருந்தனர். அப்போது மனைவியின் பின்னால் யாரோ மறைந்திருப்பதாக செந்திலுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால், வீடியோ கேமரா, பெட்ரூம் முழுக்க தெரியுமாறு சுற்றிலும் காண்பிக்க சொல்லி உள்ளார்.

உடனடியாக மனைவியும் பெட்ரூம் முழுக்க கேமராவை காட்டி உள்ளார். அப்போதும் செந்திலுக்கு சந்தேகம் தீராத செந்தில் மனைவியிடம் செல்போன் கேமராவை, கட்டிலுக்கு அடியில் திருப்பி காண்பிக்குமாறு சொல்லி தகராறு செய்தாராம். இப்படி சந்தேகம் எல்லைமீறி போனதால், ஞானபாக்கியபாய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.. மனைவி இறந்ததையடுத்து சிங்கப்பூரிலிருந்து அவர் கணவர் செந்தில் ஊருக்கு வந்திருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம்” என்கிறார்கள்.

‘‘நீ பத்தினியா? பத்தினி என்பதை நிரூபித்து காட்டு’’ என்று கணவன் டார்ச்சர் செய்ததாலேயே மனைவி தூக்கிட்டதாக தகவல்கள் பரபரத்து வந்த நிலையில், கணவனிடம் சண்டைபோட்டுவிட்டு, விளையாட்டாக தூக்குப்போட்டதால்தான் இளம்பெண் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal