பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெல்டா மாவட்டங்களில் ஆய்வுப் பணி செய்துவிட்டு, திருச்சியை நோக்கிய கிளம்பியபோது, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றிற்கு வழிவிடாமல் வந்ததாக செய்திகள் வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் நேற்று கட்டுத் தீயாக பரவியது!

உண்மையில் நடந்தது என்ன..?

கும்பகோணம் அணைக்கரை பாலம் நீண்டகாலமாக ஒருவழி பாதையாக உள்ளது. ஒரு வழியாக வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாது. ஒரு புறத்தில் இருந்து குறிப்பிட்ட வாகனங்களை அனுப்பிய பிறகு, மற்றொரு புறத்தில் உள்ள வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

பாலத்தின் இருபுறமும் வாக்கி டாக்கி மூலம் போலீசார் தகவல் பரிமாற்றம் செய்து வாகனங்களை அனுப்புவார்கள். அதேபோன்றுதான், அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனங்கள் அணைக்கரை பாலத்தின் பாதி வழியை வந்தடையும்போது அங்கு எதிர்புறத்தில் ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது.

அமைச்சரின் வாகனத்தை பாதியில் நிறுத்தியோ, ஒதுங்கி வழிவிட்டோ, பின்நோக்கி செலுத்தியோ ஆம்புலன்சிற்கு அந்த பாலத்தில் வழிவிட முடியாது.

எனவே, அமைச்சரின் வாகனங்கள் பாலத்தை பாதி கடந்த நிலையில்தான் எதிர்புறம் ஆம்புலன்ஸ் வாகனம் வந்திருக்கிறது. இது பற்றி தகவல் கேட்டதும், அமைச்சர் தனது வாகனத்தை வேகமாக பாலத்தை கடக்கும் படி ஓட்டுநருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

உண்மை நிலை இப்படி இருக்கும்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடவில்லை, என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதைத்தான், சாதாரண பொதுஜனங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இனியாவது உண்மை நிலையை ஆராய்ந்து தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal