திரைப்பட பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த அன்புசெழியன் சினிமா பைனான்சியராக உள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இவர் திரைப்படங்களை தயாரிப்பது, ரிலீசாகும் படத்தை வாங்கி விநியோகிப்பது மற்றும் திரைப்படத்திற்கு பைனான்சியராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 3 முறை அவரது அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. தற்போது சென்னையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு, தி.நகர் ராகவய்யா தெருவில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ரெய்டு நடக்கிறது. சென்னை மதுரை,தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மதுரை மேல மாசி அலுவலகம், கீரைத்துறை, தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீரென சினிமா பைனான்சியர் வீட்டில் வருமான வருத்துறை சோனை நடத்தி வருவது தமிழ் திரைப்பட உலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.