தி.மு.க. எம்.எல்.ஏ. நேற்று நள்ளிரவில் கார் விபத்தில் சிக்கிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு ரயில் நிலையத்துக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் லேசான மழை பெய்துகொண்டிருந்தது. கார் வாய்க்கால் பாளையம் என்ற இடத்துக்கு அருகில் வரும்போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர், எம்எல்ஏ வெங்கடாசலம் காயமடைந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெங்கடாசலத்திற்கு நெஞ்சு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal