கட்டிய மணைவியை நண்பருக்கு விருந்தாக்கியதோடு, இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டதால், துடிதுடித்த பெண்ணை போலீசார் காப்பாற்றிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கைதாகியிருப்பது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் என்பது கூடுதல் சுவாரஸ்யம்!

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 35 வயதுடைய பெண் ஒருவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த பெண் உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் இருந்தன. பார்ப்பதற்கே அவர் மிகவும் சோர்வாகவும், பயந்த நிலையிலும் காணப்பட்டார். உடனடியாக அவரை டாக்டர்கள் செக் செய்தனர். அப்போது பெண்ணின் பிறப்பு உறுப்பு உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் அதிகமாக இருந்தது தெரியவந்தது..

இதையடுத்து, ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தந்தனர். குன்னம்குளம் போலீசாரும் விரைந்து மருத்துவமனைக்கு வந்து பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான், அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், அவரது கணவரே நண்பருடன் சேர்ந்து இப்படி ஒரு கொடூரத்தை செய்துள்ளார் என்பதை தெரிந்து போலீசார் அதிர்ந்துவிட்டனர்.

மிக கொடூரமான முறையில் அந்த பாலியல் கொடுமை பெண்ணுக்கு அரங்கேறியிருந்ததையடுத்து, அந்த கணவரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். கணவர், ஒரு பிரபலமான தொழில் அதிபராம். மனைவியை இயற்கைக்கு மாறான முறையில், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார். மேலும், அவரது நண்பர் மீது பலாத்கார வழக்கும் பதிவு செய்தனர்.. இறுதியில் இருவரும் திருச்சூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இப்போது 2 பேருமே ஜெயிலில் உள்ளனர்.

மேலும் இச்சம்பவம் பற்றி திருச்சூர் போலீஸார் கூறுகையில், ‘‘கைதான தொழில் அதிபர் சென்னையை சேர்ந்தவராம். கடந்த 2 வருடங்களுக்கு மேலாகவே, மிக கொடூரமாக மனைவிக்கு பாலியல் சித்ரவதை தந்து வந்துள்ளார். அடிக்கடி தன்னுடைய நண்பரை வீட்டுக்கு வரவழைத்து, கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டு உள்ளார். அந்த பெண் இதற்கு ஆரம்பத்திலேயே மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதனால், அவரை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு, அதற்கு பிறகு, பாலியல் வக்கிரங்களிலும், கொடூரங்களிலும் 2 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த தொழில் அதிபரே, இதையெல்லாம் ஆபாசமாக வீடியோ எடுப்பாராம். அந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டி சித்ரவதையும் செய்திருக்கிறார். மனைவி எதிர்ப்பு தெரிவித்தபோது எல்லாம், செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை காட்டி, சோஷியல் மீடியாவில் வெளியிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். இந்த மிரட்டலால் அந்தப் பெண்ணும், அத்தனை சித்ரவதைகளையும் வெளியில் சொல்லாமல் இருந்து உள்ளார். மனைவியின் பயத்தை, அந்த தொழில் அதிபரும், அவரது நண்பரும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
இதே நிலை தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இரண்டு தினங்களுக்கு முன்பு கணவரும், நண்பரும் சேர்ந்து, பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளார். அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் பாட்டிலால் காயப்படுத்தியும் உள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் கதறி அழுதுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர்.

அதற்கு பிறகுதான் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். அதற்கு பிறகுதான் போலீசுக்கு இந்த விஷயம் தெரிந்து, நடந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கணவரால் எந்த அளவுக்கு தான் துன்புறுத்தப்பட்டேன் என்பதையும், மிருகத்தனமாக நடத்தப்பட்டேன் என்பதையும் அந்த பெண் போலீசாரிடம் அழுதுகொண்டே சொன்னார். அப்போதுதான், அவருக்கு மேலும் நிறைய கொடுமைகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இப்போதைக்கு பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கணவரும், நண்பரும் கைதாகி உள்ளனர்’’ என்றார்கள் போலீசார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal