வீட்டு வரி உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என நடுத்தர குடும்பத்து மக்களின் தலையில் கட்டண உயர்வை இடியாய் இறக்கியது தமிழக அரசு!

இந்த நிலையில்தான் ஆவின் பால், தயிர் விலை இன்று (ஜூலை 21 முதல்)உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் விலை விபரம் வருமாறு:&

100 கிராம் தயிர் விலை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும்,

200 கிராம் தயிர் விலை ரூ.25ல் இருந்து ரூ.28 ஆகவும்,

பிரிமியம் தயிர் ஒரு லிட்டர் ரூ.100ல் இருந்து ரூ.120 ஆகவும்,

ஒரு லிட்டர் நெய் ரூ.538ல் இருந்து ரூ.580 ஆகவும்,

அரை லிட்டர் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும்,

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal