எதிர்க்கட்சி துணைத் தலைவரானார் ஆர்.பி.உதயகுமார்!

அரசியல்

தமிழக சட்டசபை எதிக்கட்சித் துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில்தான் ஓ.பி.எஸ். எதிராக கடுமையாக விமர்சித்திருந்தார் ஆர்.பி.உதயகுமார். அதாவது அவரைப் பற்றி ரகசியங்களை வெளியிட்டால், ஓ.பி.எஸ். வெளியில் நடமாடவே முடியாது என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது!