முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என அறிவுறுத்தினார்.

இரண்டு நாட்கள் வீட்டுத் தனிமையில் இருந்த முதலமைச்சர் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கொரோனா தொடர்பான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal