எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய பொன்னையன், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் நீக்கப்பட்டுள்ளார்!

அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை துணை பொதுசெயலாளர்களாக நியமனம் செய்து அ.தி.மு.க., இடைக்காலபொது செயலாளர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்

இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், ராஜன் செல்லப்பா, பாலகங்கா, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ்.மணியன், காமராஜ், ப.தனபால், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தலைமை நிலைய செயலாளர் பதவியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமிக்கப்பட்டு உள்ளார். கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுசெயலாளர்களாக நியமனம்செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal