பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் இடையே, கவர்னர் அரசியலை புகுத்துகிறார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘‘ மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இணை வேந்தர், உயர்கல்வி அமைச்சர் எங்களிடம் எந்த அறிவிப்பும் இல்லாமல் வேந்தர் அறிவிக்கிறார் என்கிறார் துணை வேந்தர், சிறப்பு விருந்தினராக யாரை போடலாம் என இணைவேந்தர், செயலரிடம் கேட்க வேண்டும். எதுவும் கேட்கவில்லை. துணை வேந்தரை கேட்டால், தனக்கு எதுவும் தெரியாது. அனைத்தும் கவர்னர் அலுவலகத்தில் இருந்து வருகிறது கூறுகிறார்.

கவர்னர் அலுவலகத்தில் இருந்து இணை வேந்தர் என்ற முறையில் என்னிடம், கேட்க வண்டும் அலுவலராவது கேட்க வேண்டும். கேட்காமல், தலைமை விருந்தினர் என போட்டு பேசுவது உண்டு. கவுரவ விருந்தினர் என யாரையும் அழைப்பது கிடையாது. டாக்டர் பட்டம் அளிப்பவர்களை மட்டும் கவுரவ விருந்தினராக அழைக்கப்படுவார்கள். இந்த பட்டமளிப்பு விழாவிற்கு கவுரவ விருந்தினர் என ஒருவரை அழைக்கின்றார்.

பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்தும் செயலில் கவர்னர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதன் அடிப்படையில் செயலர் அதிகாரிகள், துணைவேந்தர், கவர்னர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினர். கவர்னர் அலுவலகத்தை கேட்டால், இப்படித் தான் செய்வோம் என கூறுகின்றனர். பல்கலை மாணவர்கள் இடையே அரசியலை புகுத்தும் செயலில் கவர்னர் ஈடுபடுகிறார் என்ற சந்தேகம் வருவதால், இணை வேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்.

கவர்னர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. அவர் மத்திய அரசால் நியமிக்கப்படுவர். இந்த காரணத்தால் மத்திய ஆட்சிக்கு கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதல்ல. மாநில அரசிற்கு, மாநில முதல்வருக்கு உடன்படுவதுதான் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்த்து பேசுவது அவரது தவறான கொள்கை. மாநில அரசு தனிக்கல்வி கொள்கை உருவாக்க தனி குழு அமைக்கப்பட்டது தெரிந்தும், மத்திய கல்வி கொள்கை பற்றி பேசுவதற்கு யார் அந்த அதிகாரங்களை கொடுத்தார் என்பது தெரியவில்லை. கவர்னராக இருப்பதை விட, பா.ஜ.,விற்கு பிரசாரம் செய்பவராக இருந்து கொண்டுள்ளார்.

இணைவேந்தர் என்ற முறையில் எங்களிடம் யாரை சிறப்பு விருந்தினராக போட வேண்டும் என ஆலோசித்திருக்க வேண்டும். பட்டமளிப்பு விழாவில் முதலில் வேந்தர், இணைவேந்தர், சிறப்பு விருந்தினர் என போடுவார்கள். கவுரவ விருந்தினர் என யாரையும் போடமாட்டார்கள்.

ஆனால், கவுரவ விருந்தினர் என ஒருவரை போட்டு, மத்திய இணை அமைச்சர் முருகனை அழைத்துள்ளனர். அவர் மத்திய கல்வி அமைச்சரும் இல்லை. துணை அமைச்சர். பட்டமளிப்பு விழாவில், கவர்னருக்கு அடுத்து கவுரவ விருந்தினரை போட வேண்டிய அவசியம் இல்லை. கவர்னரின் நோக்கம் என்ன அரசியலை, பல்கலைகழகங்களில் புகுத்த பட்டமளிப்பு விழாவை பயன்படுத்துவதால், நான் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன். பட்டமளிப்பு விழாவில் அரசியல் குறித்து பேசக்கூடாது. மாணவர்களின் வளர்ச்சி குறித்து பேசுவதற்காக இருக்க வேண்டும். இது போன்ற காரணங்களுக்காக இருக்கக்கூடாது’’இவ்வாறு பொன்முடி கூறினார்.

தமிழகத்தில் அ.தி.மு.க.விடையே உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், கவர்னருக்கு எதிராக பொன்முடி பொங்கிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal