வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில்தான் 11-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவாரா… அல்லது ஓ-.பி.எஸ்.ஸுக்கு சாதகமாக அமையுமா என்பது பற்றி பிரபல எண் கணித ஜோதிடர் ஒருவர் கணித்திருக்கிறார்.

அந்த கணிப்பை தற்போது பார்ப்போம்… ‘‘பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தின் பெயர் எண் கூட்டுத்தொகை 104. இந்த மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. காரணம் ஓ.பன்னீர் செல்வம் பிறந்த தேதி 14 கூட்டுத்தொகை 5. மண்டபத்தின் கூட்டுத்தெகை 104 கூட்டினால் 5 வருகிறது. இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமே.

ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். 11/07/2022 அன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவைத் தரும். காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் 12/05/1954 கூட்டுக்தொகை 9 வருகிறது. 12 கூட்டுத்தொகை 3 வருகிறது. பொதுக்குழு கூட்டுத்தொகை உள்ள எண் 11 கூட்டுத்தொகை 2 வருகிறது. 11/07/2022 கூட்டுத்தொகை 6. இந்த எண்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்ற எண்களான 2,6,8ல் வருகிறது.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான நாளில் பொதுக்குழு நடைபெற உள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் எண் 6 எனவே பொதுக்குழு நடைபெறும் தேதியின் கூட்டுத்தொகையும் சாதகமாகவே உள்ளது. பல பலன்களை ஓபிஎஸ்க்கு சாதகமாக கிடைக்கப்போகிறது. இந்த சாதகம்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதகத்தை தரப்போகிறது’’ என்று எண் கணிதப்படி கணித்திருக்கிறார்.

‘விதியை மதியால் வெல்வாரா’ எடப்பாடி பழனிசாமி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal