அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தொடர்ந்த வழக்கு வரும் ஜூலை 6ல் விசாரணைக்கு வருகிறது.

சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுக்குழு கூடியவுடன், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்து மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை மறுநாள் (ஜூலை 06) அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal