திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது வடக்கு சித்தாம்பூர் என்ற பகுதி. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

இங்கு ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் ரமேஷ்(40), புண்ணியமூர்த்தி(30), கடந்த 4 நாட்களுக்கு முன்பு, இவர்கள் 2 பேரும், ஒரு ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். இது தொடர்பான போட்டோக்கள்தான் வெளியாகி உள்ளது..வகுப்பறையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அந்த வகுப்பறையில் மாணவில் இல்லை. மாணவர்கள் பள்ளியை விட்டு சென்ற சமயம், அல்லது இடைவேளை நேரத்தில் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

முதல் போட்டோவில், ஒரு ஆசிரியர் சேரில் உட்கார்ந்துள்ளார்.. அப்போது அவர் அருகே ஒரு டீச்சர், டேபிளில் குனிந்து கொண்டு கேஷூவலாக பேசுகிறார். அவரது தோளில் இந்த ஆசிரியர் கை வைத்து, ஜாலியாக அரட்டை அடிக்கிறார். ஆசிரியர் கை போடுவதை அந்த டீச்சர் எதிர்க்கவோ, மறுப்பு சொல்லவோ இல்லை. மாறாக, சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒருகையில் செல்போனை பிடித்து கொண்டு, இன்னொரு கையில் டீச்சரின் தோளில் கை வைத்து கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

இரண்டாவது போட்டோவில், இன்னொரு ஆசிரியர் கிளாஸ்ரூமின் பெஞ்ச்சுகளுக்கு நடுவில் நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு சட்டை இல்லை. சட்டையை கழட்டி கையில் பிடித்து கொண்டுள்ளார். பேண்ட்டை கழட்டி தோளின்மீது போட்டுக் கொண்டுள்ளார். அரை நிர்வாண கோலத்தில் நின்று கொண்டிருக்க, அவருக்கு பக்கத்திலேயே டீச்சர், நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 டீச்சரும் ஒருவரே… வாத்தியார்கள்தான் வேறு வேறு.

ஒரே பள்ளியில் இவர்கள் 3 பேருமே பணிபுரிந்து வரும் நிலையில், இப்படி ஒரு கூத்து நடந்துள்ளது. யார் இந்த போட்டோக்களை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.. இணையத்திலும் பதிவிட்டுவிட்டதால், ஒட்டுமொத்த மாணவர்களும், பெற்றோர்களும், கல்வித்துறையும் கொந்தளித்து போயுள்ளது. மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் ஆசிரியர்களே இப்படி இருப்பதை கண்டு, ஆத்திரமடைந்தனர். பிறகு, இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சட்டை இல்லாமல் இருந்த அந்த ஆசிரியர்கள் 2 பேரையும் வாத்தலை போலீசில் புகார் பள்ளி சார்பாக புகார் செய்தனர். ஆனால், சட்டை – பேன்ட்டை கழட்டிவிட்டு, அரை நிர்வாணமாக நின்று கொண்டிருந்த ஆசிரியர், போலீசில் ஒரு புகார் தந்துள்ளார். அதில், இவர் ஸ்கூலுக்கு வருமபோது மழை வந்துவிட்டதாம். அதனால், மழையில் நனைந்து கொண்டே வந்ததாகவும், அப்போது சட்டையை கழற்றி காய வைத்து கொண்டிருந்ததாகவும், அதனை டீச்சருடன் இணைத்து அவதூறாக சித்தரித்து இப்படி போட்டோ போட்டு பரப்பிவிட்டனர், அதனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, ஏதேச்சையாக முசிறி நீதிமன்ற நீதிபதி ஆய்வுக்கு அங்கே வந்திருந்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட அவர், திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார். நடந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, புகாருக்கு ஆளாகியுள்ள 2 ஆசிரியர்களும் சித்தாம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பு பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால் 2019-ல் அவர்கள் பணி மாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்று விட்டார்கள்.

இன்று தவறு செய்தார்களா… அல்லது என்றைக்கோ செய்த தவறு இன்று வெளியாகியிருக்கிறதா என்பது ஆண்டனுக்குத்தான் வெளிச்சம். ஆனாலும், வகுப்பறையில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal