திருமணமாகாதவர்களுக்கு முதலிரவு என்பது ஒருவித ஏக்கமாகவே இருக்கும். அந்த நாளை ஏங்கித்தான் காத்துக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட இனிமையான நாளை, ஒருவன் கசப்பான நாளாக மாற்றியிருக்கிறான்.

ஆம்… முதலிரவில் ஒரு பெண் அலறித் துடிதுடித்து ஓடிய சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் நாகை மாவட்டம் திருக்குவளையை சேர்ந்த ராஜ்குமார் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைப்பெற்றது.

பின்னர் முதலிரவில் மணமகன் ராஜ்குமார், தனது மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜ்குமார் இயற்கைக்கு மாறான உறவு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனை தாங்க முடியாத அந்த பெண், அலறி கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு பதற்றமடைந்த அவரின் தாய் கதவை தட்டி உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது புதுப்பெண் உடல் முழுதும் காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். ஒரு வெறிநாயைப் போல் அந்த பெண்ணிடம் மாப்பிள்ளை நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை மீட்ட உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனிடையே மாப்பிளை ராஜ்குமார் தப்பி சென்றுள்ளார். இவரை வலைவீசி தேடி வருகின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal