வரும் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ். வசமிருக்கு பொருளாளர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வில் கடும் போட்டி நிலவுகிறது!

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். அ.தி.மு.க.வில் பொருளாளர் பதவி என்பது முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். இந்த பதவியில் தற்போது ஓ.பன்னீர்செல்வ மே இருந்து வருகிறார்.

ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறி இருக்கும் நிலையில் தற்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் பொருளாளர் பதவி மட்டுமே இருக்கிறது. இந்த பதவியையும் அவரிடமிருந்து பறிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். 11-ந்தேதி பொதுக்குழுவில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அது போன்று ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில் புதிய பொருளாளர் யார்? என்கிற கேள்வியும் அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ளது.

பொருளாளர் பதவியை பிடிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரது பெயர்கள அடிபடுகிறது. அதே நேரத்தில் மேலும் சில முன்னணி அ.தி.மு.க. நிர்வாகிகளும் பொருளாளர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால் யாருக்கு பொருளாளர் பதவியை அளிக்கலாம் என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். பொருளாளர் பதவியை கைப்பற்றுவதில் தனது ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த போட்டி எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்ததாக புதிய சிக்கலையும் சவாலயும் ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் யாருடைய மனமும் நோகாத அளவுக்கு புதிய பொருளாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal