சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இதுவரை சசிகலாவின் சொத்துக்கள் ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்க துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகம் முழுவதும் சொத்துக்களை வாங்கி குவித்தனர். இது தொடர்பாக வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டு சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் 4 ஆண்டு சிறைக்காலம் முடிந்து வெளியே உள்ளார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னை தி நகரில் உள்ள சசிகலா பினாமி பெயரில் செயல்பட்ட ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தை முடக்கியது. இதன் மதிப்பு ரூ. 15 கோடி ஆகும். இதுவரை சசிகலா மற்றும் அவரது பினாமி பெயரில் ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்க துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal