ஜூலை 11ல் நடக்க உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு காரணமாக ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மகன் உசேன் மட்டும் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து வரும் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை(ஜூலை 4) விசாரிக்க ஒப்பு கொண்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal