நாகார்ஜுனாவின் சூப்பர் படத்தின் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா.

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தில் படு கவர்ச்சியாக மொபைலா மொபைலா பாடலுக்கு நடனம் போட்டு அந்த படத்தில் கிக்கேற்றும் பல காட்சிகளில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார் அனுஷ்கா.

ஆனால், அருந்ததி திரைப்படம் தான் அனுஷ்காவுக்கு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத் தந்தது. தென்னிந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகையாக மாறிய அவர் ராஜமௌலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார்.

2015ம் ஆண்டு அவர் செய்த ஒரு பெரிய தப்பு தான் இதுவரை அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறி அவரது எதிர்காலத்தையே காலி செய்து விட்டதாக பயில்வான் ரங்கநாதன் பரபரப்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து அவர் நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அதிக எடை போட்டது தான் அவர் செய்த பெரிய தப்பு என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பாகுபலி இரண்டாம் பாகத்திலேயே அனுஷ்காவை கமிட் செய்து விட்டோமே என்பதற்காக பயங்கர சிஜி ஒர்க் எல்லாம் செய்து அழகான தேவசேனாவாக 2017ல் கஷ்டப்பட்டு ராஜமௌலி காட்டியிருந்தார். அதற்கு பின்னர், அனுஷ்காவை அவரும் பெரிய கும்பிடு போட்டு கழட்டி விட்டு விட்டார்.

நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தியதாகவும், மீடியாவுக்கு விஷயம் லீக் ஆனதும் நண்பர்கள் என பிரிந்து விட்டனர். இருவரும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்றும் பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

40 வயதை கடந்த நிலையில் அனுஷ்காவின் உடல் எடையும் கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்து போன நிலையில், எந்தவொரு தொழிலதிபரும் அவரை திருமணம் செய்து கொள்ள முன் வராதது தான் அவரது திருமணம் தள்ளிப் போக காரணம் என்றும், அனுஷ்காவை விட ஒரு வயது, இரண்டு வயது அதிகம் உள்ளவர்கள் அனைவருக்கும் இவர் அக்கா போல இருப்பதால் தான் திருமணம் தடைப்பட்டு வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal