சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு..!

அரசியல்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கல்லூரி வளாகங்களை தேர்வு செய்துகொண்டிருந்த நிலையில் மீண்டும் வானகரத்தை தேர்வு செய்திருக்கின்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக புதிய இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், செனனை வானகரத்தில் கடந்த 23ம் தேதி பொதுக்குழு நடந்த மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே அ.தி.மு.க பொதுக்குழுவிற்கு வானகரம் சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது!