எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு 2,441 செயற்குழு, பொதுக்குழுவைச் சேர்ந்தவர்களின் ஆதரவுடன் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஓ-.பி.எஸ். தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது!

ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2,441 பேரின் ஆதரவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal