திருமணமான வயதான பெண்ணின் வாயை பொத்தி காட்டுக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டிய சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இட்ட மொழி. இந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதான திருமணமான பெண், தினமும் காட்டுப்பகுதிக்கு சென்று விறகு சேகரித்து வருவது வழக்கம். அதே பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் இதை கண்காணித்து வந்திருக்கிறார். அவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

காட்டுப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து திடீரென்று 5 பேரும் அந்தப் பெண்ணை வழிமறித்து அவர் சத்தம் போடுவதற்குள் வாயை பொத்தி புதருக்குள் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கே வைத்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அப்போது அதை செல்போனில் வீடியோவாக எடுத்து இருக்கிறார்கள்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அந்த பெண்ணிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டி இருக்கிறார்கள். இதனால் ஐந்து பேரால் தனக்கு நடந்த கொடுஅமி இத்தோடு முடியாது. தொடர்ந்து கொடுமைகள் நிகழும் என்பதை உணர்ந்த அந்த பெண் உடனடியாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் போலீசார் இட்டமொழிக்கு சென்று விசாரணை நடத்தி நாகலிங்கம் என்பவரை கைது செய்து உள்ளனர். அவருடன் இளைஞர்களை இரண்டு பேர் சிறுவர்கள் இரண்டு பேர் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் அந்த நான்கு பேரையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். அந்தப் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதால் 5 பேரும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal