நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான கிரண், முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். தொடர்ந்து, வெளியான நடிகர் அஜித்தின் வில்லன், நடிகர் கமல்ஹாசனின் அன்பே சிவம், நடிகர் பிரசாந்தின் வின்னர் என ஹிட் படங்களை கொடுத்துவந்தார்.

இப்படங்களில் அவரின் கவர்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது. அந்நேரத்தில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்த அவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனையடுத்து இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி வந்தார். அதன் பின்னர், தமிழில் துணை நடிகையாக ஆம்பள, சகுனி போன்ற சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதற்கு அடுத்து அவருக்கு சொல்லுபடியாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிக்கத் தொடங்கினார். அதாவது, கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை கிரங்கடித்து வந்தார். எனினும், திரைப்பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் நடிகை கிரண் தனது பெயரில் ஒரு செயலியையும், இணையதளத்தையும் தொடங்கியுள்ளார்.

செயலி, இணையதளம் தொடங்கி அதில் வீடியோ காலில் பேச, கவர்ச்சி புகைப்படம் அனுப்பி வைக்க என கட்டணம் வசூலித்து வருகிறார். அதாவது செயலியில் தனது ரசிகர்களை நேரில் சந்திக்க, தன்னுடன் வீடியோ காலில் பேச, தனது கவர்ச்சி படங்களை நேரடியாக செல்போனுக்கு அனுப்பி வைக்க என பல்வேறு சேவைகளுக்கு தனித்தனியாக கட்டண விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தனிப்பட்ட முறையில் நடிகை கிரணை சந்திப்பதற்கும், பேசுவதற்கும் ரூ.1.5 லட்சம் கட்டணம், செயலியில் கிரணுடன் 10 நிமிடம் வீடியோ கால் பேசுவதற்கு ரூ.15 ஆயிரம் கட்டணம், கிரணின் கவர்ச்சி புகைப்படங்களை தனிப்பட்ட முறையில் பெற ரூ.1999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நடிகை கிரணின் இன்ஸ்டாகிராமில் இல்லாத கிரண் பற்றிய பிரத்யேக தகவல், புகைப்படங்களை பெற ரூ.49 கட்டணம், தனிப்பட்ட முறையில் இரண்டு ஸ்பெஷல் புகைப்படங்களை பெற ரூ.999 கட்டணம், கிரணுடம் 30 நிமிடம் வீடியோ காலில் பேசுவதற்கு ரூ.30,000 கட்டணம் என எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தி திரையுலக நடிகைகள் சிலர் இதுபோன்று தனி செயலி தொடங்கி கிரங்கடிக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடும் நிலையில், அதனை கிரண் பின்பற்றுகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal