தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமைந்ததும் மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திது. இந்நிலையில்தால் ‘எப்போது வழங்கப்படும்’ என்பதை டி.ஆர்.பாலு எம்.பி., தெரிவித்திருக்கிறார்.

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. நிதி நிலைமை மேம்படும் போது இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி .ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதை அடிப்படையாக வைத்து எதிர்க்கட்சிகளும், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் சண்முகம் சாலையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டும், திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதையொட்டி சாதனை விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;-

‘‘இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டாலும், பீனிக்ஸ் பறவை போல மீண்டும் ஆட்சி அமைத்த பெருமை கருணாநிதியைச் சேரும். திராவிட மாடல் ஆட்சி என்பது மாநில சுயாட்சி பெறும் ஆட்சி. சமயசார்பின்மையே திராவிடமாடல் ஆட்சி. 505 தேர்தல் வாக்குறுதிகள் ஒரே ஆண்டில் 320 வாக்குறுதிகள் ஒரே ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் ஆயிரம் ரூபாய் தரவில்லை என்று வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி வருகின்றனர். குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தரமாட்டோம் என எங்கேயும் சொன்னது கிடையாது. இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் நிச்சமாக மற்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்’’என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal