‘காங்கிரஸ் கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே முன்னேற்றம் எற்படும்’ என்ற தொனியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கட்சியின் தலைமைக்கு அறிவுறுத்தியிருந்தார்!

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடக்கும் சிந்தனையாளர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும்போது,

‘‘கட்சியின் அமைப்பில் உடனடியாக மாற்றம் தேவைப்படுகிறது. நாம் பணிபுரியும் முறையையும் மாற்ற வேண்டும். இந்த மாநாட்டில் கட்சியினர் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தலாம். ஆனால், கட்சியின் வலிமை மற்றும் ஒற்றுமை குறித்த செய்தி நாடு முழுவதும் செல்ல வேண்டும். நமது தனிப்பட்ட விருப்பங்களை விட கட்சியை முக்கியமானதாக கருத வேண்டும். கட்சி ஏராளமானவற்றை செய்துள்ளது. தற்போது திருப்பிதர வேண்டிய நேரம் இது.

குறைந்த அரசு, பெரிய நிர்வாகம் என பிரதமர் மோடியும் பா.ஜ.க,வும் வலியுறுத்துகிறது. இதற்கு சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவது என்பது அர்த்தம். வரலாற்றை மாற்றியமைக்க முழுமனதுடன் முயற்சி எனவும் அர்த்தமாகிறது. மகாத்மா காந்தியை கொன்றவர்களை பெருமைப்படுத்தி, ஜவஹர்லால் நேரு செய்த பணிகளை வரலாற்றில் இருந்து அழிக்கவும் நினைக்கின்றனர். பேச்சாற்றல் உள்ள பிரதமர் மோடி, மக்களுக்கு ஆறுதலாக எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் இந்த பேச்சுதான், ஒவ்வொரு காங்கிரஸ் தலைவர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal