ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது. ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழ் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்கள், அதுவும் குறிப்பாக 11, 12&ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களை மதிக்காமல், தவறான செயல்களில் அதிகம் ஈடுபட்டு வந்தது தொடர்பாக தினசரி பத்திரிகைகள் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று சட்டசபையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது. மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது. ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழ் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும்’’ எனவும் கூறியுள்ளார்.

பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் இறுதி ஆண்டு முடிந்து மாற்றுச்சான்றிதழ் பெறும் போது அதில் நடத்தை பற்றி குறிப்பிடப்படும். அதில் ‘நன்று’ என்று இருப்பது அவசியம். ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் ஒழுக்கமற்ற மாணவர் என்று மாற்றுச்சான்றிதழில் குறிப்பிடப்படும் எச்சரித்துள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்படி குறிப்பிடப்படும் மாணவர்கள் வேறு பள்ளியில் அல்லது கல்லூரியில் சேருவது என்பது கடினமாகி விடும்.

ஆசிரியர்களை கடவுளாக போற்றாவிட்டாலும் சக மனிதராக மதிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal