தமிழகத்தில் இன்று முதல் அக்னி தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும்வெயில் காலத்தில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் எனவும், மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுமாறும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழதக்தில், கடந்த 10 நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடையின் உச்சகட்டமாக கருதப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்று துவங்குகிறது. இந்த காலம் வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என்பதால், அடுத்து வரும் நாட்களில் வெயில் வறுத்தெடுக்கும் சூழல் உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல்நலனை காப்பது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ‘‘வெயில் காலத்தில் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மது அருந்துவதை குறைத்து கொள்ளுங்கள். தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோடைக்காலத்தில் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்துச் செல்வது நல்லது’’என வலியுறுத்தியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal