தி.மு.க. ஆட்சி அமைத்து ஒருவருடம் நிறைவடையும் நிலையில், அமைச்சரவையில் பெரியமாற்றம் நிகழு வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் அமைச்சரவை மாற்றப்பட போவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்தன.இதில் உதயநிதி ஸ்டாலின் எந்தத்துறை ஒதுக்குவது என்பது பற்றி இன்னும் முழுமையாக முடிவாகவில்லையாம்.

உதயநிதிக்கு எந்தத்துறையை ஒதுக்குவது என்பது குறித்து இன்னு ஆலோசனை நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த வருடம் இறுதியில் வெளிநாடு செல்கிறார். லண்டன் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். இந்த நிலையில்தான் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில சீனியர் அமைச்சர்களுக்கான துறைகள் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் கடந்த முறை அமைச்சரவை உருவாக்கத்தின் போது அப்செட்டில் இருந்த அமைச்சர் ஒருவருக்கான துறை மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற அந்த எம்.எல்.ஏ. அமைச்சரான போது பெரிய துறை கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்போது பெரிய துறை வழங்கப்படவில்லை. இதனால் அவர் அமைச்சர்களுக்கான வீடுகளில் குடியேறாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போதே அந்த சீனியர் அமைச்சரிடம் போக்குவரத்து துறை வேண்டுமா என்று கேட்டு இருக்கிறார்களாம். ஆனால் அவரோ எனக்கு அந்த துறை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். எனவே, அவருக்கு முக்கியத்துறை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

அதே போல், தஞ்சை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எனவே, தஞ்சை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜா பெயரும் புதிய அமைச்சரவை பட்டியலில் பரிசீலனையில் இருக்கிறதாம். அதே போல் சிவக்குமார் என்கிற தாயகம் கவியும் புதிய அமைச்சரவை பட்டியலில் இடம் பிடித்திருப்பதாக அறிவாலயத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

வருகிற மே 7&ந்தேதி தெரிந்துவிடும் என்கிறார்கள். ஒருவேளை சட்டசபை நடப்பதால், சட்டசபை முடிந்த பிறகும் யாருக்கு பதவி… யாருக்கு கல்தா என்பது தெரிந்துவிடும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal