400 இடங்களை பெறுவோம் என்பது தற்போது பெரிய ஜோக் ஆகிவிட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கிண்டலடித்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக 400 இடங்களை கைப்பற்றும் என உறுதிபட தெரிவித்து வருகிறது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த சசி தரூர், “தேசிய ஜனநாயக கூட்டணி அதனுடைய பெரும்பான்மையை இழந்து வருகிறது. 300 பெறுவது கூட அவர்களுக்கு சவாலான விஷயம் தான். இந்த நிலையில் நாங்கள் 400 பெறுவோம் என அவர்கள் கூறி வருவது பெரிய ஜோக் ஆகி விட்டது.” எனக் கூறினார்.