கோவிட் பரவல் அதிகரித்து வரும் வேளையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,

‘‘சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் கோவிட் பரவல் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. கடந்த 3வது அலை காலத்தில் நம் அரசு எடுத்த நடவடிக்கையால் பெரும் பாதிப்பை தவிர்த்தோம். இது போல் 4 வது அலை வந்தால் நாம் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கோவிட்டை தடுக்க தடுப்பூசியே முக்கியமாகும். அனைவருக்கும் தடுப்பூசி என்ற நிலை வர வேண்டும்.

தமிழகத்தில் 91.5 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1.48 கோடி பேர் 2வது தடுப்பூசி போட்டுள்ளனர். கட்டுப்பாடுகள் பொது மக்கள் கூடும் அனைவரும் முகக்கவசம் அணிய நடவடிக்கை வேண்டும். மக்களின் பொருளாதார நிலை பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்’’ இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal