டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து கண்காணிப்பு தீவிரபடுத்தியுள்ளனர். 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சென்னையிலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இன்று காலை கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அந்த இமெயிலில் எங்கள் குழுவினர் பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் வெடிகுண்டு வைத்துள்ளனர் ஆனால் அது வெடிக்கவில்லை ஆனால் இந்த நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்க நாங்கள் தயாராக இருந்தோம், அது கொல்கத்தா விமான நிலையத்தில் மட்டுமல்ல, இயற்கையிலும் மிகப் பெரியதாக இருந்தது. 26 ஏப்ரல் 2024, வெள்ளிக்கிழமை மதியம் 12:55 மணிக்கு விமான நிலையங்கள் வெடிப்பதற்குத் தயாராக உள்ளன என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை ஊட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பிற்பகலில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுகிறது. விமான பயணிகள், உடைமைகள், விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன.

உள்நாடு மற்றும் சர்வதேச முணயங்களில் இருந்து விமானங்களில் பயணிக்க வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கூடுதல் சோதனைகள் காரணமாக உள்நாட்டு விமான பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாக வர அறிவுறுத்தியுள்ளனர். சர்வதேச விமான பயணிகள் 3 மணி நேரம் முன்னதாக விமான நிலையத்திற்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal