கொடநாடு வழக்கு விசாரணை நேற்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இன்னும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது என்று நீதிபதியின் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த முக்கிய நபர் யார் என்பது தற்போதுதான் தெரியவந்திருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2107-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் கொடநாடு எஸ்டேட் காவலர் ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சேலம் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். இதேபோல் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய சிலர் அடுத்தடுத்து உயிரிந்தனர்.

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மறு விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார், கனகராஜின் உறவினர்கள், கொடநாடு ஊழியர்கள், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், ஆறுக்குட்டியின் தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன், அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவி ஆகியோரிடமும் தனிப்படை போலீசார் விசாரித்தது. மேலும் சென்னையில் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்களை சசிகலா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொடநாடு பங்காளவில் என்னென்ன இருந்தது? காணாமல் போன பொருட்கள் எவை? என 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு விசாரித்தனர் தனிப்படை போலீசார். இதனடிப்படையில் தனிப்படை போலீசார் அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் முதல் கட்டமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழன்னிசாமிக்கு மிக நெருக்கமான சேலம் இளங்கோவனை விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நிழல் முதல்வராக வலம் வந்தவர் சேலம் இளங்கோவன்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal