த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விஜய் பேசுகையில், ‘‘தவெகவின் தேர்தல் அறிக்கை அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் சார் போல் ஏமாற்ற மாட்டோம்.

அதேபோல் மற்றும் பலர் போல் அள்ளிவிடும் தேர்தல் அறிக்கை அல்ல இது.. தவெக ஆட்சிக்கு வந்தால், எது சாத்தியமாகுமோ அதனை தான் தேர்தல் அறிக்கையாக கொடுப்போம். ஆட்சிக்கு வந்த பின் சொல்லாத விஷயங்களையும் செய்வோம். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஒரே குடையின் கீழ் இருக்கும் கூட்டம். அது அவர்களின் தேர்தல் அறிக்கையை பார்த்தாலே தெரியும். ஒருவர் ரூ.10 ஆயிரம் கொடுப்பேன் என்று அறிவித்தால், இவர் ரூ.8 ஆயிரத்திற்கு கூப்பன் கொடுப்பேன் என்று அறிவிக்கிறார்’’ என்று விமர்சித்தார்.

தொடர்ந்து விஜய் தவெக தேர்தல் அறிக்கையை வாசித்தார். அதன்படி, குடும்பத் தலைவிகள் கணக்கில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஆண்டுதோறும் 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும். அதேபோல் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ் அளிக்கப்படும். அனைவருக்கும் வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மலிவு விலையில் மருந்துகள் அளிக்கப்படும். அதேபோல் விவசாய குழந்தைகளின் கல்வி செல்வை அரசே ஏற்கும்.

5 ஏக்கர் நிலம் வரை வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வந்து சேரும் வகையில் திட்டம் உருவாக்கப்படும். அதேபோல் மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் அளிக்கப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் விஜய்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal