தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியமைத்த பிறகு, மாநில கவர்னருக்கும், தி.மு.க. தலைமைக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டி உள்ளார்.
தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்தார்.
‘‘கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற ஆளுநர் தவறுவதாகவும், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாகவும்’’ அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.