திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் போக்குவரத்து பணிமனையின் தி.மு.க. தொழிற்சங்க தலைவராக பணிபுரியும் பழனியப்பன் மீது தொழிலாளர்கள் அடுக்கடுக்கான புகார்களை வைத்திருந்தனர். இது பற்றி ‘தமிழக அரசியல்’ வார இதழிலில் எழுதியிருந்தோம். இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை துறைரீதியாக பழனியப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி உப்பிலியபுரம் போக்குவரத்துப் பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், உங்களுடைய (தமிழக அரசியல்) வார இதழில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் உண்மை. தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர் போடும் ஆட்டத்தை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தீர்கள். இது எங்களுடைய மேலதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது.

இந்த நிலையில்தான் மற்றவர்களிடம் மதுபோதையில் எப்படிப் பேசுவாரோ, அதே போல் உப்பிலியபுரம் கிளைமேலாளரிடமும் பேசியிருக்கிறார். இது குறித்த புகாரை அவர் மேலிட அதிகாரிகளுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை துறைரீதியாக தி.மு.க. தொழிற்சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனிமேலாவது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை அவமரியாதையாக நடத்தாமல் இருந்தால் நல்லதுதான்’’ என்றனர்.

போக்குவரத்துத்துறைக்கு எஸ்.எஸ்.சிவசங்கர் புதிதாக பொறுப்பேற்ற பிறகு தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை கட்சி பாகுபாடின்றி அனைரும் வரவேற்று வருகின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal