கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் வாடகைக்கு விடுபவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

இந்த நிலையில்தான், தமிழக அரசு 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துகிறது.

இது குறித்து மத்திய நெடுஞ்சாலை ஆணையம் கூறியிருப்பதாவது,

  • ஏப்ரல் 1ந்தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
  • வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு கட்டணத்தை உயர்த்துவது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal