கடந்த சட்டன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி இருந்த ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணைந்தார். அந்த இணைப்பு விழா மாநாட்டில் பேசிய முதல்வர், ‘ராஜ கண்ணப்பன் மனதில் பட்டதை படக்கென்று சொல்லிவிடுவார். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார். அவரிடம் பிடித்தது இதுதான்’ என்று முதல்வர் சொன்னார். அன்றைக்கு அப்படி புகழ்ந்து பேசிய ராஜ கண்ணப்பனின் இலகா இன்று பறிபோயிருக்கிறது.

அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துத்துறையை பறிக்க பல காரணங்களைச் சொன்னாலும், இரண்டு காரணங்களை முக்கியமாகச் சொல்கிறார்கள்.

முதல் காரணம்… அதாவது, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பணிபணையில் பணிபுரியும் தொழிற்சங்க ‘தலை’யின் ‘தள்ளாட்டம்’ பற்றி பலமுறை அமைச்சருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். அதே போல், ‘லைட் டூட்டி’க்கு கட்சி பாகுபாடின்றி கல்லாகட்டிவிட்டாராம் இந்த ‘தலை’யாக இருக்கக் கூடியவர்.

இவருக்கு ஆதரவாக அதே பணிமனையில் பணிபுரியும் இளைய அதிகாரி ஒருவர், மாலைப் பொழுது வந்துவிட்டாலே ‘மயக்கத்தில்’தான் இருப்பாராம். இவரும் ‘தலை’யும் நெருக்கமாம். இவர்கள்¢ போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லையாம். அதே போல், ‘ஏழுமலை’யான் பெயர் கொண்ட அதிகாரி, ‘மக்கள் பிரதிநிதி’யும் நானும், முன்பு ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பணிமனையில் பல ஆண்டுகாலம் கோலோச்சி வருகிறாராம்.

இந்த விவகாரம் பற்றி அமைச்சருக்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். முதல்வரின் தனிப்பிரிவிற்கு, சில ஆதாரங்களுடன் அனுப்பப்பட்டிருந்ததாம். அதன் பிறகுதான் அமைச்சரிடம் இதுபற்றி மேலிட அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பணிபுரிபவர் ராஜேந்திரன். இவரை கடந்த 27.3.22 காலை போக்குவரத்துறை அமைச்சர் சிவகங்கை வீட்டிற்கு வர சொல்லி உள்ளார்.அதனை கேட்டு அவரும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புகண்ணனும் சென்றுள்ளார். வீட்டின் உள்ளே நுழைந்த உடன் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ராஜேந்திரனை ‘நீ எஸ்.சி. பி.டி.ஓ. தானே? என்று கூறி நீ சேர்மன் (அதிமுக) பேச்சை கொண்டு தான் நடப்பாய், நாங்கள் சொல்வதை கேட்பது இல்லை என்று கூறி எஸ்.சி. பி.டி.ஓ. என்று 6 தடவைக்கு மேல் எஸ்.சி. பி.டி.ஓ. என்று கூறியுள்ளார். உடனே உன்னை தூக்கி அடிக்க வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். உன்னை செயற்பொறியாளர் கிட்ட சொல்லி உடனே தூக்கி அடிக்கிறேன் என்று அமைச்சர் ஒருமையில் பேசியதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரமும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு சென்றிருக்கிறது. இதன் பின்னணியில்தான் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது என்கிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நீண்ட கால அணுபவம் பெற்றிருப்பவர்கள். இவருக்கு கீழ் இயங்கும் போக்குவரத்துத்துறையில் இனி எந்தத் தலையீடும் இன்றி சிறப்பாக செயல்படும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்! சிறப்பாக செயல்பட நாமும் வாழ்த்துவோம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal